அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பொது கவுன்சிலிங் இன்று முதல் தொடங்க உள்ளது. இதில் 1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு கவுன்சிலிங் மொத்தம் 443 கல்லூரிகளில் 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விளையாட்டு பிரிவு,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெற்றது.
அதனைப் போலவே மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலின் கலந்து 25ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் தாமதமானதால் கவுன்சிலிங் தேதி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் தொடங்க உள்ளது.