பிரபல பாடலாசிரியர் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியரான கபிலன் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் திரையுலக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று இரவு சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
அவரின் உடலானது தற்பொழுது சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருக்கின்றது. தூரிகை “பீயிங் வுமன்” என்ற இதழையும் “தி லேபிள் கீரா” என்ற ஆடை வடிவமைக்கத்தினையும் நடத்தி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.