Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவமே….. இறந்த தாயின் உடல்…. “சக்கர நாற்காலியில் மயானத்திற்கு கொண்டு வந்த மகன்”…. பரபரப்பு…!!!!!

இறந்த தாயின் உடலை மகன் சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் முருகானந்தம். முருகானந்தம்(60) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு அவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் சென்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முருகானந்தம் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரின் தாயார் நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். வறுமை மற்றும் அறியாமையால் என்ன செய்வது என தெரியாமல் தனது தாயின் உடலை சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் கட்டி 2 1/2 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு நேற்று அதிகாலையில் எடுத்துச் சென்றுள்ளார். பின் தகன மேடை பராமரிப்பாளருக்கு தகவல் கொடுத்திருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஊழியர்கள் பார்த்த பொழுது இறந்த மூதாட்டியின் உடல் சக்கர நாற்காலியில் எடுத்துவரப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதனால் முருகானந்தமிடம் இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு கொண்டுவர அரசின் பல்வேறு உதவிகள் இருக்கின்ற நிலையில் ஏன் இதுபோன்று சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு வந்தீர்கள் என கேட்ட பொழுது தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என கூறினார்.பின் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை வாங்கிக் கொண்டு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து மூதாட்டியின் உடலை தகனம் செய்தார்.

Categories

Tech |