டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தவிர மற்ற மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.