மன ஆரோக்கியம் என்பது நமது உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றை அடங்கியதுதான். நாம் எப்படி நினைக்கிறோம், உணர்கிறோம், செயல்படுகிறோம் என்பதை இது பாதிக்கின்றது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை நாம் எவ்வாறு கையாளுகிறோம் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வது மற்றும் தேர்வுகள் செய்வது என்பதையும் தீர்மானிப்பது இந்த மன ஆரோக்கியம் தான். குழந்தை முதல் பெரியோர்கள் வரை ஒவ்வொரு பருவத்திலையும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலையும் மன ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது.
ஒருவருடைய வாழ்நாளில் மனநல பிரச்சனைகளை சந்தித்தால் அவர்களின் பிரச்சனை மனநிலை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கக்கூடும். மனநல பிரச்சினைகளுக்கு பல காரணிகள் இருக்கின்றன. அதாவது மரபணுக்கள் அல்லது மூளை வேதியியல் போன்ற உயிரியல் காரணிகள், அதிர்ச்சி அல்லது துஷ்பிரயோகம் போன்ற வாழ்க்கை அனுபவங்கள், மனநல பிரச்சனைகளின் குடும்ப வரலாறு ஆகியவை . மனநல பிரச்சனைகள் பொதுவானவை.
நாம் ஒவ்வொரு நாளும் மன ஆரோக்கியத்தை எதிர்கொள்கிறோம். ஒரு நபரின் மன ஆரோக்கியம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் போல மிகவும் முக்கியமானது. மனநல நிலைமைகளும் உடல் நோய்களைப் போலவே உண்மையானவை. மன ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மன அழுத்தம் மற்றும் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும். நல்ல சமூக உறவுகள் வைத்திருந்தால் மன ஆரோக்கியமாக இருக்கும்.மிகவும் நெகிழ்ச்சியுடன் இருப்பது அல்லது கடினமான சூழ்நிலையில் இருந்து எளிதாக மீள்வதற்கு மன ஆரோக்கியம் உதவும்.
மனரீதியாக ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்பது கடினம், எப்போதும் வேலை செய்யாது, குறிப்பாக அதிக மன அழுத்தம் அல்லது துக்க காலங்களில் மன அழுத்தம் அதிகமாக தான் இருக்கும். இருந்தாலும் எவ்வித பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஒருவரின் மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே ஒவ்வொருவரும் மன ஆரோக்கியத்தை காக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எவ்வித குழப்பங்கள், கோபம் என எதுவும் இல்லாமல் மனதெளிவுடன் மகிழ்ச்சியாக இருந்தாலே உங்களது மனம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.