பிரிட்டன் நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான சார்லஸ் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கிறார்.
பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மகனான சார்லஸ் தன் 73 வயதில் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மகாராணி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு சார்லஸ் சென்றுள்ளார்.
அதன் பிறகு, மகாராணியின் மறைவிற்கு பின், மன்னராக பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பி இருக்கிறார். புதிதாக மன்னராக பதவி ஏற்கும் சார்லஸிற்கு, அங்கிருந்த மக்கள் வாழ்த்து கூறி வரவேற்றார்கள். அதன்படி இன்று சார்லஸ் முறைப்படி மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான நிகழ்வு லண்டனில் இருக்கும் செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடந்திருக்கிறது.
இந்த நிகழ்வில் அவரின் மனைவியான கமிலா மற்றும் முக்கிய நபர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். மன்னர் சார்லஸ், அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை நான் காப்பாற்றுவேன் என்று உறுதி கூறியிருக்கிறார்.