கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல்பாகம் வரும் 30ம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் புது வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. அவற்றில் எழுத்தாளர் கல்கி பற்றியும் பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களின் இயற்கையான குணம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 30ம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Writer. Visionary. Literary Game Changer!
It's Kalki's 123rd Birthday & we thank him for #PonniyinSelvan & characters that have stayed with us!#PonniyinSelvan #CholasAreComing #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/2WFdkgUP8V— Lyca Productions (@LycaProductions) September 9, 2022