Categories
உலக செய்திகள்

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த…. எலிசபெத் ராணி மறைவு…. தொடர்ந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு….!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.

பிரிட்டன்  நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக காலமானார். தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் உலக தலைவர்கள் பலர் மகாராணி இறப்பிற்கு இரங்கல் தெர்வித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேபாள அரசானது இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 10 (இன்று) முதல் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |