சீனாவில் கிருமிநாசினி வாங்க ஏற்பட்ட தகராறின் போது இளம்பெண் ஒருவர் 2 பெண்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரானா வைரஸ் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த தொற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க அரசு தீவிரமாக போராடி வருகிறது. எனினும் அந்நாட்டில் மாஸ்க்(Mask ) மற்றும் கிருமி நாசினி (Antiseptic) மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஒரே ஒரு கிருமிநாசினி வாங்க போட்டி போட்ட போது பெண்களுக்கு இடையை கைகலப்பு ஏற்பட்டது. இந்த தகராறின் போது 17 வயது இளம்பெண் ஒருவர் கத்தியால் 71 வயது மூதாட்டி மற்றும் 9 வயது சிறுமியை குத்தியுள்ளார்.
இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். காயமடைந்த 9 வயது சிறுமி மருத்துவமனையில் சேர்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட அந்த பெண்னை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.