Categories
சினிமா

கனல் கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிவந்தனை….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில் உலகம் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பிறகு இவருக்கு நீதிமன்றம் நிபந்தனைச் ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலை என இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை இன்று முதல் 17ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |