ஜவுளி கடையின் ஆஃபரால் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று புடவை வாங்கிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த கடையின் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஸ்பெஷல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. அதாவது கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேன்ட் ஷர்ட் என பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் முன்பு பெண்கள் கூட்டம் திரண்டது. அதோடு முதியவர்கள் மற்றும் ஆண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் ஜவுளி எடுப்பதற்காக அதிகாலை முதலே கடைக்கு வர தொடங்கினார். மேலும் கடையின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், 500 ஊழியர்களை கடை நிர்வாகம் நியமித்ததனர்.