கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உருக்கமான கடிதம் சிக்கியது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் பிரபல விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசென்ஜித் கோஷ்(23), என்ற வாலிபரும் அர்பிதாபால்(20) என்ற இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளனர். முகவரியில் இருவரும் கணவன் மனைவி என குறிப்பிட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி அறைக்குள் சடலமாக கடந்த இருவரையும் மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய சோதனையில் இருவரும் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் நாங்கள் உலகத்தை விட்டு செல்வதற்கு மூன்று பேர் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜா(42)ஆந்தி, ந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார்(22) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனை அடுத்து ராஜாவும், நிதீஷ்குமாரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, அர்பிதாபால் தியாகராய நகரில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த ராஜா, நிதீஷ் குமார், தர்மேந்திரா ஆகியோருடன் இளம்பெண் நெருக்கமாக பழகியுள்ளார்.
இதனை பயன்படுத்தி மூன்று பேரும் இளம்பெண் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படங்களை செல்போனில் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்துள்ளனர். இதனால் தனுடன் விடுதியில் தங்கியிருந்த பிரசென்ஜித் கோஷை அமிர்தபால் ரகசியமாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு தன்னை மிரட்ட மாட்டார்கள் என இளம்பெண் நம்பியுள்ளார். ஆனால் அதற்கு பிறகும் மூன்று பேரும் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் அர்பிதாபால் வாலிபருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.