Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவால் விடுத்த இளம்பெண்…. மணமகன் தாலி கட்டும் நேரத்தில் தட்டி பறித்த காதலன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மணமகன் தாலி கட்டும் நேரத்தில் காதலன் தாலியை பறித்து இளம்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் வேலை பார்த்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்கு வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த சதீஷ்குமார் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா? என தட்டி கேட்டுள்ளார்.

அதற்கு எனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இதுதான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியதோடு, உன்னால் முடிந்தால் திருமணத்தை தடுத்துப் பார் என இளம்பெண் சவால் விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை இளம்பெண்ணின் திருமணம் நடைபெற இருந்தது. மணமேடையில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். இரு வீட்டார் முன்னிலையில் மணமகன் தாலி கட்டம் என்ற போது சதீஷ்குமார் திடீரென தாலியை தட்டி பறித்து இளம்பெண்ணின் கழுத்தில் கட்ட முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சதீஷ்குமாரை பிடித்து தாலி கட்ட விடாமல் தடுத்தனர். பின்னர் சதீஷ்குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணமகள் திருமணத்தை தடுத்து பார் என சவால் விட்டதால் கோபத்தில் தாலியை பறித்து இளம்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்றதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் மணமகன் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை திரும்ப தரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண்ணிடம் கேட்டதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் 3 பேரிடமும் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |