உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சிறுவன் தன்னுடைய தந்தைக்கு தன் கல்லீரலின் ஒருபகுதியை வழங்குவதற்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது. இதனால் தன்னுடைய கல்லீரலின் ஒருபகுதியை தன் தந்தைக்கு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பதிலளிக்க கோரி உத்திரபிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அத்துடன் வழக்கு விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் அம்மாநில சுகாதாரத்துறை தரத்தில் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதுமட்டுமின்றி 18 வயது பூர்த்தியாகாத மைனர் சிறுவனால் தன் உடல் உறுப்பு தானத்தை வழங்க முடியுமா? என்பது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.