இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் படம் “ஓ மை கோஸ்ட்”. இதில் இவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், புகழ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேதங்களில் நடித்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து இப்படத்தை வாவ் மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோ சார்பில் வீரசக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.