தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் மூலம் நடித்த பிரலமானவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இணைந்து படங்கள் தயாரிப்புகளும் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை இதனால் அதிர்ச்சியான சார்மி வலைதளத்தில் திறந்து விலகுவதாக அறிவித்தார்.
லைகர் தோல்விக்கு காரணம் சார்மி என்றும் பூரி ஜெகநாதன் டைரக்டராக இருந்ததாலும் படத்தைச் சார்மி தான் இயக்கினார் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியது. மேலும் லைகர் தோல்வியால் அடுத்த படமான ‘ஜன கன மன’ படத்தை கைவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மீண்டும் இணைய பக்கத்தில் வந்து சார்மி வெளியிட்டுள்ள பதிவில், “வதந்திகள்.. வதந்திகள்… வதந்திகள்… எல்லா வதந்திகளும் பொய்யானவை. பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.