கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் அல்லாது வீடுகளில் வைத்து குழந்தைகள் ஆணா ? பெண்ணா என்பதை கண்டறியும் கருத்தரிப்பு மையங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதா என்ற குற்றசாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்க அமலாக்கத்துறையினர் தீவிரமான சோதனையில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் வைத்து கருவில் உள்ள குழந்தை ஆணா ? பெண்ணா என்பதை கண்டறியும் வகையில் சட்டவிரோதமாக கருத்தரிப்பு மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த கருத்தரிப்பு மையத்தை நடத்தி வந்த வடிவேலு என்பவரை மருத்துவம் மற்றும் ஊரக களப்பணி இயக்க அமலாக்கதுறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.