பதின்வயதில் உள்ள ஒருவருக்கு மனநோய் உள்ளதை கண்டறிவது எப்படி?
டெக்ஸ்ட்டாரீனியா
டெக்ஸ்ட்டாரீனியா என்பது இப்போது அதிகமாக பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் இடையே இருக்கும் மனநோய் ஆகும். இந்நோய் உள்ளவர்களால் மின்னணு கருவிகளை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. நாளொன்றுக்கு இவர்கள் பலமணி நேரம் செல்பேசி திரையையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
மன அழுத்தம்
நன்றாக பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த பதின்வயதில் இருக்கும் ஒரு வளர் இளம் பருவ சிறுவனோ, சிறுமியோ யாருடனும் அதிகம் பேசாமல், விளையாட்டு, படிப்பு ஆகிய எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருந்தால் அவர் அமைதியான சுபாவம் உடையவர் என கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அவருக்கு மனஅழுத்தம் இருக்கலாம்.
மேனியா
அதேபோன்று அதீத உற்சாகம் மற்றும் தெம்புடன் செயல்பட்டு நீண்டநேரம் தேவைப்படும் ஒரு செயலை குறுகிய காலத்தில் செய்து முடித்தால் அந்த சிறுவனோ, சிறுமியோ “மேனியா” எனும் மனநோய்க்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
ஆளுமைச் சிதைவு
ஆளுமைச் சிதைவு இருப்பது பிறரிடம் பேசும் போதும், பழகும்போதும் வழக்கத்திற்கு மாறான கோபம், பிடிவாதம், திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் ஆகிய அறிகுறிகளை கொண்டுள்ள இந்நோய் வெவ்வேறு குடும்ப மற்றும் வெவ்வேறு சமூகச்சூழல்களில் வெவ்வேறு விதமாக வெளிவரும். இது பெரும்பாலும் பதின் வயதுகளிலேயே தெரிய வரும்.
மனச்சிதைவு
குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்தால் மரபணு வாயிலாக இந்நோய் உண்டாக வாய்ப்புண்டு. பிரம்மை பிடித்ததுபோல நடந்துகொள்ளுதல், அதிகபயம் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தலாம்.