Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் உயர்வு….. மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால்….. தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும்….. கண்டனம் தெரிவித்த டிடிவி..!!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்..

பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலாகிறது என்றும், 2026 -2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்று முதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |