Categories
சினிமா தமிழ் சினிமா

வெறுப்பேத்றீங்களா! மிஸ்டர் பேட்மேன்…. கண்களாலேயே பேசிக் கொள்ளும் ரவி-மகா ஜோடி…. செம வைரல்…..!!!!

விஜே மகாலட்சுமி மற்றும் ரவீந்தரின் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், ரவீந்தரை 2-தாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதேபோன்று ரவீந்தருக்கும் 2-வது திருமணம் தான். அதன்பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு திருமணம் ஆகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருவரின் திருமணம்தான் தற்போது வரை ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

இந்த புதுமண தம்பதிகளுக்கு இணையதளத்தில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், பலர் கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் ரவீந்திர் மடியில் உட்கார்ந்து மகாலட்சுமி ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்களாலேயே பேசிக் கொள்கிறீர்களா என பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சிலர் வெறுப்பேத்றீங்களா மிஸ்டர் பேட்மேன் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |