ஆபத்து இல்லாத அதேபோன்று சிறு சேமிப்பாளர்களுக்கு கைக் கொடுக்கும் பொது வருங்கால வைப்புநிதி (PPF) திட்டத்தில் சரியாக முதலீடை தொடங்கினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புண்டு. அரசு திட்டமான இவற்றில் சேமிப்புடன் சேர்த்து EEE அம்சத்துடன் பொதுமக்களுக்கு வரிகளைச் சேமிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வரிச்சலுகைகளை அனுபவிக்க முடியும். இப்போது PPF திட்டம் வருடந்தோறும் 7.1 % வட்டிவிகிதத்தை வழங்குகிறது. அத்துடன் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வழிகாட்டுதலின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் தங்களது பிபிஎப் கணக்கில் தொடர்ச்சியாக 15 வருடங்கள் வரை தங்களது பணத்தை முதலீடு செய்யலாம்.
எனினும் ஒருவருக்கு 15 வருட முடிவில் பணம் தேவையில்லை எனில், அவர் PPF கணக்கின் காலத்தை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக்கொள்ளலாம். PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிப்பதன் வாயிலாக 5 வருடத்திற்கு இதனைச் செய்யலாம். நல்லவட்டி , குறைந்த ஆபத்து மற்றும் வரியில்லாத தன்மை போன்றவற்றுடன் கிடைக்கும் PPFதிட்டத்தில் முதலீட்டாளர்கள் முறையாக முதலீடு செய்தால் 1கோடி ரூபாய் வரையிலும் சேமிப்பை உயர்த்தலாம். இதற்கு முதலீட்டாளர்கள் கீழே குறிப்பிட்டுள்ள முறையை கடைபிடிக்க வேண்டும். உங்களது PPF கணக்கில் நாளொன்றுக்கு 417.ரூபாய் முதலீடு செய்தால், மாதமுதலீட்டு மதிப்பு சுமார் 12,500 ரூபாய் ஆகும்.
அதன்படி, ஒரு ஆண்டுக்கு உங்கள் பொதுவருங்கால வைப்புநிதிக் கணக்கில் ரூபய்.1,50,00க்கும் அதிகமாக முதலீடு செய்கிறீர்கள் எனில் இது அதிகபட்சமான வரம்பு ஆகும். 15 வருடங்களில் திரட்டப்பட்ட மொத்தத் தொகையானது ரூபாய் 40.58 லட்சமாக இருக்கும். அதன்பின் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 2 முறை பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும். இதனை 25 – 50 வயது வரை அதாவது 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்துவந்தால் முதிர்வு காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூபாய்.1.03 கோடியாக இருக்கும். மொத்த வட்டியானது கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். 25 வருடங்களில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத்தொகை ரூபாய்.37 லட்சமாக இருக்கும். இதன் காரணமாகதான் ppf திட்டத்தில் திட்டமிட்டு முதலீடு செய்யவேண்டும். இவற்றில் மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படுவதால், ஒவ்வொரு மாதமும் 1 -5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்யவேண்டும்.