சென்னையில் நள்ளிரவில் கர்ப்பிணியை அழைத்து வந்த ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்து எஸ்ஐ 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரவில் ஒரு வழி பாதையில் வந்த ஆட்டோவை எஸ் ஐ நிறுத்தியுள்ளார். சுமார் 12 மணி அளவில் ஆட்டோவை நிறுத்திய நிலையில் ஆட்டோவில் உள்ளே இருந்த ஓட்டுநர் கர்ப்பிணிப் பெண் இருப்பதால் அவசரமாகச் செல்ல வேண்டும் என இந்த வழியில் வந்தேன் என கேட்டுள்ளார் .
ஆனால் காவலர் அபராதம் செலுத்தினால்தான் விடுவேன் என ஆவேசமாக கத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணியை அழைத்து வந்த ஆட்டோ டிரைவரிடம் ரூ.1500 அபராதம் விதித்த காவலர் – வைரலாகும் வீடியோ #trafficpolice #Chennai #PregnantWoman #asianetnewstamil pic.twitter.com/lAJfGCmKwi
— Asianetnews Tamil (@AsianetNewsTM) September 10, 2022