ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய படம் “3”. இந்த திரைப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். கடந்த 2012ஆம் வருடம் வெளியாகிய இப்படம் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவற்றில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது 3 படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்து உள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோகவரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் உள்ள அனைவரும் பாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
அத்துடன் திரையரங்குகளில் 200க்கும் அதிகமான காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்துவரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு போன்ற 2 மொழிகளில் தயாராகிறது. 3 திரைப்படத்தின் வெற்றியால் தெலுங்கில் வாத்தி படத்துக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.