மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் நெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் ஆணைவாரி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஜெகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஜெகன் தூக்கி வீசப்பட்டதில் அவர் மீது அவ்வழியாக வந்த மற்றொரு சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் அனைவரும் பேருந்து நிறுத்தம் சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து நடைபெறுகின்றது. இதனால் வேகத்தடை அமைக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின் தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வார காலத்துக்குள் அங்கு வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்தபின் மறியலை கைவிட்டு களைந்து சென்றார்கள். பின் விபத்தில் உயிரிழந்த ஜெகனின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.