மொபட் மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே இருக்கும் மேலப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரும் அவரின் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரும் நேற்று காலை டீ குடிப்பதற்காக புத்தகரத்தை நோக்கி மொபட்டில் சென்றுள்ளார்கள். அப்பொழுது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் மொபட்டும் நேருக்கு நேர் மோதியதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இதுயடுத்து அங்கிருந்தவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் யோகேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தார்கள்.