Categories
அரசியல் மாநில செய்திகள்

AM வேண்டாம்… PM வேண்டாம்… MM ஆக இருக்கேன்… CM ஸ்டாலின் ஆசை ..!!

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  AM, PM பார்க்காத CM. காலை, மாலை பார்க்காத சி.எம், அது ஒரு பக்கம். ஆனால் நான் நினைத்தது என்னவென்றால் AM, PM என்பதை விட நான் MM  CM-ஆக இருக்க வேண்டும். MM  CM என்றால் Minuts to Minutes. ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாக்காமல் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நிலையில் இருந்து, தமிழ்நாடு நம்பர் 1 என்று உருவாக்க வேண்டும் என்கின்ற நிலையில், எங்களது பணி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடி, நீங்க எல்லாம் சமூக வலைதளங்களில் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். திமுகவில் எம்எல்ஏக்கள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அவரிடம் இருக்கின்ற எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை, உங்களிடம் எம்.எல்.ஏ உங்களிடம் பேசுவதில்லை. எங்கள் எம்எல்ஏ வந்து உங்களிடம் பேசுகிறார்கள் என்று ஒரு புரூடா விட்டு கொண்டிருக்கிறார்கள்.

அரசின் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கக்கூடிய அத்தனை அமைச்சர்களுமே  போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் துறையின் சார்பில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற காட்சியை நான் மட்டுமல்ல இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.  மக்கள் எந்த நம்பிக்கையுடன் நமக்கு வாக்களித்தார்களோ, தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வோம் என்ற உறுதிமொழி தந்தோம், வாக்குறுதி தந்தோம், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு சொன்னோம், நேரடியாக சென்று அவர்களிடத்தில் விளக்கி சொன்னோம் என தெரிவித்தார்.

Categories

Tech |