அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாவட்டமாக சென்று மனுக்களை பெற்றேன். ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் ஒரு 75% மனுக்களுக்கு பரிகாரம் காணப்பட்டது. அது இப்போது தொடர்ந்து நடக்கிறது, ஸ்டாலின் என்பது மாற்றப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் இப்போது அதற்கென்று ஒரு அதிகாரிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வகையில் அதிகாரிகள் அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது, சாலையில் செல்கின்ற போது இருபுறங்களிலும் மக்கள் நின்று கொண்டு வரவேற்கின்ற இடத்தில் எங்களிடத்தில் மனுக்களையும் கொடுப்பார்கள். அந்த மனுக்களை பார்த்தால் அப்படியே காரை நிறுத்த சொல்லுவேன். ஒருத்தர் வைத்திருந்தாலும் சரி, அதை நிறுத்தி வாங்கிக்கொண்டு தான் போவேன், அது மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்களை வரவேண்டாம் அங்கே நிற்க சொல்லிவிட்டு நானே வேன்னை விட்டு இறங்கி, நடந்து சென்று அதை வாங்கிக் கொண்டு வருவேன்.
சாதாரண பேப்பரை வைத்திருப்பார்கள், ஏதோ பில் வச்சு இருப்பாங்க. அது மனு என்று நினைத்து நான் அதை வாங்கி விட்டேன். இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. அந்த மனுவை கொடுக்கும் போது எப்பவுமே சில குறை சொல்லிக் கொடுப்பார்கள், பல வருடம் ஆக கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நடக்க மாட்டேங்குது, இனியாவது நீங்கள் பாருங்கள் என்று சொல்வார்கள். அது கடந்த கால ஆட்சியில்… இப்போது நம்பிக்கையுடன் கொடுக்கும் போதே நன்றி என்கிறார்கள், கோரிக்கை முடிந்து போய்விட்டது போல மக்கள் நினைக்கின்றார்கள் என தெரிவித்தார்.