Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில்…. முன்னேறி வரும் இராணுவ படைகள்…. தகவல் வெளியிட்ட உக்ரைன் அரசு….!!

கிழக்கு உக்ரைனில் உக்ரைன் இராணுவ படைகள் மின்னல் வேகத்தில் முன்னேறி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பிடியில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் படைகள் இறங்கியுள்ளன. கிழக்கு உக்ரைனில், உக்ரைன் படைகள் மின்னல் வேகத்தில் முன்னேறி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ சமூக ஊடகங்களில் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியதாவது, “கிழக்கு உக்ரைனில், உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன. இதன்மூலம், பல நகரப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்று வருகின்றன. மேற்கத்திய இராணுவ ஆதரவுடன் உக்ரேனிய துருப்புக்களின் தைரியம் வியக்கத்தக்க முடிவுகளைத் தருகின்றது.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்புவது முக்கியம்.  போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பது என்பது உக்ரைனில் அமைதியை வென்றெடுப்பதாகும் என்று தெரிவித்துள்ளார். வடகிழக்கு கார்கிவ் பகுதியில் சுமார் 30 நகரங்கள் மற்றும் கிராமங்களை துருப்புக்கள் மீட்டெடுத்தன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அறிவித்தார்.கார்கிவ் நகருக்கு ராணுவ ஆயுதங்களை அனுப்பி வருவதாக ரஷ்ய தரப்பில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஜெர்மனியின் ஆதரவை நிரூபிக்க இந்த பயணம் அமைந்துள்ளதாக” அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |