Categories
சினிமா

பிரபல நடிகருக்கு உடல்நல பாதிப்பு?…. தீயாய் பரவும் Photo…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நஸ்ரியா. இவரின் கணவரும் அதற்கு சளைத்தவர் அல்ல. அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் அவரது நடிப்பில் மிரட்டி இருப்பார். அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா தனது கணவர் பகத் பாசிலுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் பகத் பாசில் உடல் இளைத்தது போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு உடல் நல பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.இதனைப் போலவே பகத் பாஸில் பிறந்த நாளின் போது வெளியான புகைப்படத்திலும் அவர் உடல் மெலிந்து தான் காணப்பட்டார். ஆனால் அவர் திரைப்படத்திற்காக உடலை இழைத்து இருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |