Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி…. கல்விக் கட்டணம் செலுத்த புதிய நடைமுறை…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் அதற்கான கல்வி கட்டணத்தை கலந்தாய்வு நடைபெறும் இடத்திலேயே செலுத்தும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்டவுடன் அந்த கல்லூரிக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணத்தையும் உடனே அங்கேயே செலுத்த வேண்டும்.

மேலும் அனைத்து கட்டணத்தையும் தனியார் கல்லூரிகளுக்கு இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார் வருகிறது. கட்டண கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |