Categories
சினிமா

BIGG BOSS நிகழ்ச்சியால் Abortion…. பிரபல தமிழ் நடிகை சோகம் …..!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது . அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியால் தனக்கு கர்ப்பம் கலைந்ததாக நடிகை சுஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சுஜா மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மருத்துவரிடம் காட்டியதில் அவர் எட்டு வாரம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

பிறகு மருத்துவர் கொடுத்த அறிவுரையின் பெயரில் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் ஒரு டாஸ்கின் போதுரத்தம் வெளியேறிய நிலையில் மீண்டும் மருத்துவரிடம் காட்டிய போது அவருக்கு கரு கலைந்து விட்டது தெரியவந்துள்ளது. . இதனால் அவரால் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாத நிலையில் இரு தினங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதாகவும் அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்

Categories

Tech |