தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்த மாதம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்பதால் வாரம் தோறும் தவறாமல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முழுவதும் 50,000 இடங்களில் இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 2000 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களின் பொதுமக்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். மேலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.