கபிலன் மகள் தூரிகை மரணத்திற்கு நடிகை கஸ்தூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியரான கபிலன் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் திரையுலக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். தூரிகை “பீயிங் வுமன்” என்ற இதழையும் “தி லேபிள் கீரா” என்ற ஆடை வடிவமைக்கத்தினையும் நடத்தி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரின் மறைவிற்கு சினிமா பரபலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகை கஸ்தூரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, கவிஞர் கபிலன் அவர்கள் மகள் மரணம் என்ற துயர செய்தி கேட்டு உறைந்து போய் உள்ளேன். கண்களில் மின்னல், முகத்தில் புன்னகை அந்த அழகு பெண் எதற்கு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும்? தற்கொலை எப்போதும் எதற்குமே முடிவல்ல. பிரச்சனைகளின் ஆரம்பம். என்னுடைய அதிர்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
கவிஞர் கபிலன் அவர்கள் மகள் மரணம் என்ற துயர செய்தி கேட்டு உறைந்து போயுள்ளேன். கண்களில் மின்னல், முகத்தில் புன்னகை…. அந்த அழகு பெண் எதற்கு தன்னை தானே மாய்த்து கொள்ள வேண்டும்? தற்கொலை எப்போதுமே எதற்குமே முடிவல்ல… பிரச்சினைகளின் ஆரம்பம். No words to express my shock and sadness.
— Kasturi (@KasthuriShankar) September 9, 2022