Categories
தேசிய செய்திகள்

கடவுளுக்கு காணிக்கையாக…. பிளேடால் நாக்கை அறுத்துக்கொண்ட நபர்….. மூடநம்பிக்கையின் உச்சம்….!!!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் புரப் சாரா கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (40) என்பவர் வழக்கம் போல் கோயிலுக்குச் சென்றுள்ளார். பிறகு கங்கை நதியில் குளித்த சம்பத் தனது மனைவியைத் தன் காலில் விழுந்து கும்பிடும்படிக் கூறியுள்ளார். அவர் காலில் விழுந்ததவுடன் தன்னிடமிருந்த பிளேடை எடுத்து தன் நாக்கை வெட்டிக்கொண்டார் என சம்பவ இடத்தில் இருந்த இவரது மனைவி கூறுகிறார்.

இதனையடுத்து, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் விவேக் கேசர்வானி கூறுகையில், “சம்பத்தின் நாக்கு முழுதாகத் துண்டிக்கப்படவில்லை. அதை மீண்டும் தைத்துச் சரிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |