பட்டினத்தார், ‘வளர்பிறை, ‘அவள் ஒரு தொடர்கதை’, `அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் லீலாவதி. தமிழ், கன்னடம், தெலுங்கு என சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போது 85 வயதாகும் இவருக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் தனது மகன் வீட்டில் இருக்கும் அவருக்கு வீட்டிலேயே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இவருக்கு உடல்நிலை சரியில்லாததை அறிந்த கன்னட திரைத்துறையினர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள்.