காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்துள்ளனர்.