Categories
உலக செய்திகள்

பேருந்து, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அங்கு தென்கிழக்கு உள்ள ஓயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் மறு புறம் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரும் பேருந்தும் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

அதனால் கார் மற்றும் பேருந்துக்குள் பலரும் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு உடனே மீட்பு பணியில் ஈடுபட்டது. இருந்தாலும் விபத்தில் சுமார் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |