உங்களின் பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதை புகார் அளிப்பதற்கு முதலில் EPFO அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ரிஜிஸ்டர் கிரிவன்ஸ் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், பிஎஃப் உறுப்பினர், EPSஓய்வூதியம் பெறுவர் மற்றும் வேலை வழங்குபவர் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் UAN எண் மற்றும் செக்யூரிட்டி கோடு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் கேட் ரீடைல்ஸ் என்கின்ற அர்ச்சனை கிளிக் செய்து ஓடிபி ஆப்ஷனுக்கு சென்று உங்களது புகாரை நீங்கள் தெரிவிக்கலாம்.
EPFOவிதிகளின்படி உங்கள் சம்பளத்திலிருந்து நிறுவனம் pf தொகையை கழித்த பிறகு அந்த தொகையை 15 நாட்கள் வரை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம்.மேலும் பிஎப் கணக்கு குறித்து நீங்கள் புகார் எதுவும் தெரிவிக்க விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 1800118005 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.