Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே! எதிர்க்கட்சிகள் குறை கூறினால்….. உடனடியாக தக்க பதிலடி கொடுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்…..!!!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திராவிட மாடல் அரசு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குளித்தலை தொகுதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 234 தொகுதிகளில் குளித்தலை தான் சிறந்தது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை சட்டசபைக்கு முதன்முதலாக அனுப்பியது குளித்தலை தொகுதி தான். இங்கு கலைஞரின் திருவுருவச் சிலையை வைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நம்முடைய முதல்வர் ஸ்டாலின் மருதூர் முசிறி காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கலைஞரின் பொற்கால ஆட்சியின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி போன்றவைகள் இந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி நம்முடைய முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் எப்போதும் இருக்கும். அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு இளைஞர்களாகிய நீங்கள் முழு முயற்சியுடன் கட்சி பணியை தீவிரமாக செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சிகள் நம்மை நம்மைக் குறை கூறும் போது இணையதளத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அதே சமயம் நேரடியாக எவ்வித மோதலும் இருக்கக் கூடாது. நோட்டாவுடன் போட்டியிடும் கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கு வழி காட்டியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. நம்முடைய முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் அனைவரையும் முதல்வர் சமமாக தான் பார்க்கிறார் என்று பெருமிதத்துடன் கூறினார்.

Categories

Tech |