Categories
பல்சுவை

VIP மொபைல் எண்…. வோடாபோன் பயனர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நவீன காலக்கட்டத்தில் ஒருவருக்கு ஒரு சிம் எனும் நிலைமாறி, பல எண்கள் வைத்திருக்கும் நிலைமை வந்து விட்டது. சிம்கார்டு வாங்கச் சென்றால் எந்த நிறுவனத்தின் எண்ணைப் பெறப்போகிறீர்கள் என்ற கேள்வி மனதில் எழும். உங்களுக்கு பிடித்த பேன்சி எண்ணை வாங்க விரும்பினால் அதனை செலவே இல்லாமல் கொடுக்கிறது வோடாபோன். வாடிக்கையாளர்கள் தற்போது VIP மற்றும் பேன்சி எண்களை முற்றிலும் இலவசமாகப் பெறலாம்.

இத்தகைய மொபைல் எண்கள் மிக சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஏனெனில் அவை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வோடபோன்-ஐடியா பேன்ஸி எண்களை எப்படி இலவசமாகபெறுவது என்பதை தெரிந்துக்கொள்வோம். வோடபோன் ஐடியா தன் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு இணைப்புகளைக் கொண்ட இருபயனர்களுக்கும் இலவச விஐபி மற்றும் பேன்ஸி மொபைல் எண்களை வழங்குகிறது.

 படி 1: இதற்கென பயனாளர்கள் வோடபோன்-ஐடியா இணையதளத்துக்குள் ஹெடர் மெனுவிலுள்ள புது இணைப்புவகைக்குச் சென்று விஐபி(அல்லது)பேன்ஸி எண்களைச் சரிபார்க்க வேண்டும்.

படி 2: மெனுவின் உள்ளே பேன்ஸி எண்கள் வகையின் கீழ் பயனாளர்களுக்கான புது விருப்பங்கள் இருக்கும்.

படி 3: அதன்பின் நீங்கள் ஒரு புது வலைப்பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு நீங்கள் ப்ரீபெய்ட் (அல்லது) போஸ்ட்பெய்ட் இணைப்புகள் தொடர்பான விபரங்கள் இருக்கும். அவற்றில் நீங்கள் ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும்.

படி 4: அதன்பின் பயனாளர்கள் தங்களது பகுதியின் PIN குறியீட்டை தங்கள் மொபைல் எண்ணுடன் உள்ளிடவும்.

படி 5: அடுத்ததாக வோடபோன்-ஐடியாவின் சிஸ்டம் நீங்கள் எடுக்க விரும்பும் எண்ணைத் தேடும்படி கேட்கும். அதேசமயத்தில் வோட போன்-ஐடியா உங்களுக்கு இதுபோன்ற எண்களை வழங்கும் நிலையில், அது இலவசமாகக் கிடைக்கும்.

இலவசம் மற்றும் பிரீமியம் எண்கள் என இருதெரிவுகள் இருக்கும். இலவச எண்களில் உங்களுக்கு பிடித்தமான எண் இல்லை எனில் பிரீமியம் எண்களை பார்க்கலாம். பிரீமியம் எண்களுக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுத்த பின் பயனாளர்கள் தங்களது வீட்டு முகவரியை உள்ளிட்டு பணம் செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து உங்கள் விஐபி எண்ணுடன் சிம் கூடியவிரைவில் டெலிவரி செய்யப்படும்.

Categories

Tech |