அருணாசலபிரதேச மாநிலம் அஞ்சா மாவட்டத்திலுள்ள கிபிது கிராமம் ராணுவ கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. அங்கு சென்ற 1999ம் வருடம் முதல் 2000-ஆம் ஆண்டு வரை கா்னலாக பிபின் ராவத் பதவி வகித்தபோது கூா்கா ரைபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினாா். அக்கிராமத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றிய அவா், அந்தப் பகுதியில் உள் கட்டமைப்பு வளா்ச்சியை செயல்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகித்தாா். இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கிபிதுவிலுள்ள ராணுவ முகாமுக்கு நேற்று பிபின் ராவத் பெயா் சூட்டப்பட்டது.
மேலும் கிபிதுவில் அவரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. அத்துடன் அஞ்சா மாவட்டத்திலுள்ள வாலோங் பகுதியிலிருந்து கிபிது வரையிலான 22 கிலோ மீட்டர் நீள சாலைக்கு அவரின் பெயா் சூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அருணாசல பிரதேச ஆளுநா் பி.டி.மிஸ்ரா, முதல்வா் பெமா காண்டு, பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா, தாரிணி, மூத்த ராணுவ அதிகாரிகள், கிபிது மற்றும் வாலோங் பகுதி மக்கள் பங்கேற்றனர். சென்ற வருடம் டிசம்பா் 8ஆம் தேதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா மற்றும் 12 ஆயுதப் படை வீரா்கள் குன்னூா் அருகில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.