நேபாளம் தாா்சுலா மாவட்டத்தில் நேற்று மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச் சரிவில் சிக்கி 5 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அங்கு கன மழை பெய்து வந்ததால் மஹாகாளி, லாஸ்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவற்றில் 2 போ் சிக்கி இறந்தனர். இதையடுத்து மழையால் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா். அத்துடன் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 7 போ் காணாமல்போய் இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனா். அவ்வாறு காணாமல் போனவா்களை நேபாள காவல்துறையினரும் , ராணுவத்தினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நிலச் சரியில் சிக்கியவா்களை மீட்கும்பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. நேபாளத்திலிருந்து இந்திய எல்லைக்குள் பாயும் மகாகாளி நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால், உத்தரகாண்ட் கோட்டிலா கிராமத்தில் வெள்ள நீரில் சிக்கி ஒரு பெண் பலியானாா். இதில் கோட்டிலாகிராமம், காளி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனிடையில் வீடுக்குள் புகுந்த சேறுடன் கலந்த வெள்ளநீரில் சிக்கி பெண் ஒருவா் பலியானாா். 36 வீடுகளில் வெள்ளநீரானது புகுந்துள்ளது. கிராமத்தில் பாதிக்கப்பட்ட 170 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். வெள்ள நீரில் கால் நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மாநில பேரிடா் மீட்புபடை, காவல்துறையினா் மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். எல்லையை ஒட்டிய நேபாள பகுதியில் அமைந்துள்ள கிராமங்களிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்..