Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஜீப்…. பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

ஜீப் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பைனாபுரம் கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் எத்திக்கட்டை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலை முடிந்து தொழிலாளர்கள் தோட்டத்து உரிமையாளர் ஜீப்பில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஜிப்பை அத்தாலு(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் எத்திக்கட்டை பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரத்தினி, நாகம்மா, சின்னம்மா, அமுதா உள்பட எட்டு பெண்களும், ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |