ஹோட்டலில் இருந்த 500 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் கெட்டுப் போன மீன்களை சமைத்து உணவு செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாநகர நல அதிகாரி ராம்குமார் தலைமையிலான சுகாதாரதுறை அதிகாரிகள் நேற்று காலை சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது ஹோட்டலில் பதப்படுத்த எந்த வசதியும் இல்லாமல், ஐஸ் கட்டிகள் மட்டும் போட்டு கெட்டுப்போன மீன்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 500 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.