பாதயாத்திரையை பார்க்க சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புலியூர்குறிச்சியில் புனித தேவசகாயம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:30 மணி அளவில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை துவங்கியுள்ளார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது குளச்சலை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மூதாட்டி மயங்கி சாலையில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூதாட்டியை தூக்கி சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை அடுத்து மூதாட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.