Categories
ஆன்மிகம்

ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில்…. விமர்சையாக நடைபெற்ற பவித்ரோத்ஸவ உற்சவம் விழா….!!!!

மூன்றாவது நாள் பவித்ரோத்ஸவ உற்சவம் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில் நிறைவடைந்துள்ளது.

திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாம் நாள் பவித்ரோத்ஸவம் நேற்று மகாபூர்ணாஹுதியுடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இந்த விழாவின் கடைசி நாளான இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12 மணி வரை சாந்தி ஹோமம், மகாபூர்ணாஹுதி, கும்பப்ரோக்ஷணம், நிவேதனம் ஆசியவை சாஸ்திர முறைப்படி நடந்து முடிந்தது.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை தாயாருடன் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. அதன் பின் சக்கரத்தாழ்வாரை பத்ம புஷ்கரணிக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அங்கு பாரம்பரிய முறைப்படி சக்கரத்தாழ்வார் ஸ்நானம் செய்யப்படுவார். அதன் பின் மாலை 6:30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்த அருள் புரிவார்.

Categories

Tech |