Categories
தேசிய செய்திகள்

யுபிஐ மூலம் டிரான்ஸாக்ஷன்…. ஒரே நாளில் எவ்வளவு தொகை?…. இதோ முழு விபரம்….!!!!

ஏராளமான மக்கள் பணத்தை கொடுத்து பொருள் வாங்குவதற்கு பதில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து கொள்வது எளிமையாக உள்ளதாக கருதுகின்றனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட டேட்டாவின்படி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ என பிரபலமாக அறியப்படும் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் மூலம் ரூபாய்.657 கோடி டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன் செய்யும் அளவானது வால்யூம் அடிப்படையில் 4.6 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 1 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (யுபிஐ) என்பது ரிசர்வ் வங்கியின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) வாயிலாக உருவாக்கப்பட்ட உடனடி கட்டணமுறை ஆகும்.

இந்த யூபிஐ கட்டண சேவை வாயிலாக வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு நபரும் 2 வங்கி கணக்குகளுக்கு இடையில் எந்நேரத்திலும், எங்கிருந்தும் பணத்தை உடனே டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ள முடியும். இவற்றில் பயனர்கள் விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸை வைத்து பணத்தை அனுப்பவேண்டும், ஒரே ஸ்மார்ட் போனில் ஒன்றுக்கு அதிகமான ஐஎப்எஸ்சி குறியீடு (அல்லது) கணக்கு எண்ணை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகணக்குகளை இணைத்து வைத்துக் கொண்டு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம்.

இதன் வாயிலாக செய்யப்படும் டிரான்ஸாக்ஷன் உடனே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அத்துடன் பிஹெச்ஐஎம் யூபிஐ ஆப்ஸ் மற்றும் வங்கிகளின் மொபைல் ஆப்ஸ் தவிர்த்து போன்பே, பேடியம் மற்றும் கூகுள் பே ஆகிய பல கட்டண ஆப்ஸைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இதன் வாயிலாக செய்யப்படும் தினசரி டிரான் ஸாக்ஷன்களின் வரம்பை ரூபாய்.2 லட்சமாக ஆர்பிஐ மற்றும் என்பிசிஐ நிர்ணயம் செய்து இருக்கிறது. தற்போது ஒவ்வொரு வங்கிகளின் யூபிஐ டிரான்ஸாக்ஷனுக்குரிய வரம்பு எவ்வளவு என்பதுபற்றி தெரிந்து கொள்வோம்.

எஸ்பிஐ

ஒரேதவணை – ரூபாய்.1லட்சம், தினசரி வரம்பு – ரூபாய்.1 லட்சம்.

ஐசிஐசிஐ

ஒரேதவணை – ரூபாய்.10,000( கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு ரூ.25,000), தினசரி வரம்பு – ரூபாய்.10,000 ( கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு ரூ.25,000).

ஆந்திரா வங்கி

ஒரேதவணை – ரூபாய்.1லட்சம்,  தினசரி வரம்பு – ரூபாய்.1 லட்சம்.

ஆக்சிஸ் வங்கி

ஒரேதவணை – ரூ.1லட்சம், தினசரி வரம்பு – ரூ.1 லட்சம்.

கனராவங்கி

ஒரே தவணை – ரூபாய்.10,000,  தினசரிவரம்பு – ரூபாய்.25,000 ஆகும்.

டேனா வங்கி

ஒரேதவணை – ரூ.1லட்சம், தினசரி வரம்பு – ரூபாய்.1 லட்சம்.

சிட்டி வங்கி

ஒரே தவணை -ரூ.1லட்சம், தினசரி வரம்பு – ரூ.1 லட்சம்.

சிட்டி யூனியன் வங்கி

ஒரே தவணை – ரூ.1லட்சம், தினசரி வரம்பு -ரூ.1 லட்சம்.

பரோட்டா வங்கி

ஒரேதவணை – ரூ.25,000; தினசரி வரம்பு -ரூ.1 லட்சம்.

பேங்க் ஆஃப் இந்தியா

ஒரே தவணை – ரூ.10,000, தினசரி வரம்பு -ரூ.1 லட்சம்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

ஒரேதவணை – ரூ.25,000, தினசரி வரம்பு – ரூ.50,000.

மகாராஷ்டிரா வங்கி

ஒரே தவணை -ரூ.1 லட்சம், தினசரி வரம்பு – ரூ.1 லட்சம்

Categories

Tech |