ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுவதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர்,தேதி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாகை,தூத்துக்குடி மற்றும் 800 உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் உருவாக சாத்தியக்கூறு இருப்பதை குறிக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.