Categories
சினிமா

காடுன்னு ஒன்னு இருந்தா, ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்…. வெளியான பிக்பாஸ் அப்டேட்….!!!!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரையிலும் 5 சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் 6வது சீசன் தொடங்கப்படவுள்ளது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டிசென்றார். இதையடுத்து 2வது சீசனில் ரித்விகாவும், 3வது சீசனில் முகின் ராவும், 4வது சீசனில் ஆரியும், 5வது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர்.

சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை அடுத்து 6வது சீசனை தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீனனின் புரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புது வீடியோவை பிக்பாஸ் குழு வெளியிட்டு உள்ளது. அவற்றில் காடுன்னு ஒன்னுஇருந்தா, ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும். பிக்பாஸ் சீசன்-6 விரைவில் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Categories

Tech |