ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெற இருக்கும் வீரர்களின் பட்டியலை வருகிற செப்டம்பர் 15-ம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும். அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் நடைபெறும் சமயத்தில் ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பியதால் தற்போது வீரர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பிசிசிஐ டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி தேர்வில் தற்போது 3 பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பும்ரா மற்றும் ஹர்சேல் படேல் இருவரும் காயத்திலிருந்து மீண்டு விளையாடுவதற்கு தற்போது தயாராகி விட்டார்கள். இதில் பும்ரா பற்றி எவ்வித பிரச்சனையும் இல்லை என்றாலும் ஹர்சேல் படேல் சொதப்பிவிட்டால் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்து விடும்.
இதனையடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் இருவருமே சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் என்றாலும், பிளேயிங் லெவலில் ஒருவர் மட்டும்தான் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 2 பேருமே திறமையான வீரர்கள் என்பதால், ஒருவரை மட்டும் தேர்வு செய்வது சற்று கடினமானது ஆகும். மேலும் ஜடேஜா தற்போது காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தேர்வு செய்யப்படும் வீரர்களில் குல்தீப் யாதவ், ஷாபஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஜடேஜாவுக்கு பதில் யாராவது ஒருவரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும்.